வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து நிலைமையை மதிப்பிடுவதற்காக ஹெலிகாப்டரில் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.