சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் ஒரு சிலரால் பிரதமர் நரேந்திரமோடியின் உருவப்படம் எரிக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. நாடும், நாட்டு மக்களும் வளத்தோடும், வலிமையோடும் திகழ அனுதினமும் அயராது பாடுப்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை எரித்த செயல் மிகவும் கண்டிக்கதக்கது.
ஜனநாயகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்செயலை கண்டித்து நேற்று கடலூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன முழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பது சரியானதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.