சுரங்க திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை திரும்ப பெறுக : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்லி : சுரங்க திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். சில சுரங்கங்களால் சுற்றுச்சூழல், வனம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்றும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.