பாட்னா: பிரதமர் மோடியின் தாயை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பீகார் மக்கள் தக்க பாடம் சொல்லி தருவார்கள் என பாஜ தலைவர் ஜே.பி.நட்டா கூறி உள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா,
“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால் தூண்டப்பட்ட ஒருவர் மூலம் பிரதமர் மோடியின் மறைந்த தாயார் மீது அவதூறு கருத்துகள் வீசப்பட்டன. பிரதமர் மோடியின் தாயார் பற்றி காங்கிரஸ் தற்போது வௌியிட்டுள்ள வீடியோ அவர்கள் ஒரு மோசமான மனநிலையை கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது இந்த பிரச்னையை பாஜ எழுப்பும். பிரதமர் மோடியின் மறைந்த தாயார் பற்றி அவதூறுகளை தெரிவித்த எதிர்க்கட்சிகளுக்கு பீகார் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்” என்றார்.