சென்னை: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: 13 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் மற்றும் 4 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதலுக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
பாலிப்பட்டு ஊராட்சி, குப்சூர் குடியிருப்பு பகுதி, சின்ன எட்டுப்பட்டி குடியிருப்பு பகுதி, குடூர் குடியிருப்பு பகுதி, கட்டூர் குடியிருப்பு பகுதி, செட்டிக்குளம் ஊராட்சி, இளந்திரை கொண்டான் ஊராட்சி, சொக்கலிங்க புரம் ஊராட்சி, தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி, அவுரிக்காடு ஊராட்சி, காவித்தண்டலம் ஊராட்சி, வில்லிவாக்கம் ஒன்றியம் தந்தை பெரியார் நகர் ஆகிய இடங்களில் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படுகிறது.
நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் 4 பள்ளிகளுக்கு தேவையான 12 பட்டதாரி ஆசிரியர்கள், பணியிடங்கள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்படும். பள்ளிகளில் ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் 2 பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டுதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.2.59 கோடி நிதி ஒப்பளிப்பு அளிக்கப்படுகிறது.
