சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணங்களால் தங்கம் விலை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் திருமண மாதங்களை நோக்கி நெருங்கும் நேரத்தில் நுகர்வோர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17ம்தேதி கிராம் ரூ.12,200க்கும், ஒரு பவுன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது, கடந்த மாதம் 28ம்தேதி பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ம்தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,900 என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது.
ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 என ஆனது. இதையடுத்து, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கி விட்டது என சாமானிய மக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கு விற்பனையாகிறது.


