சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. அதுவும் தினம், தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இந்த மாதமும் தொடர்கிறது. அதுவும் வழக்கத்துக்கு மாறாக காலை, மாலை என இரண்டு வேளையும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பாரம்பரியம், கலாச்சார அடையாளமாக தங்கம், வெள்ளி பொருட்கள் பார்க்கப்படுகின்றன. அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, நேற்று (22.10.2025) புதன்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.300 குறைந்து கிராமுக்கு ரூ.11,700க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.40 குறைந்து கிராமுக்கு ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174க்கு விற்கப்படுகிறது.