விலைவாசி உயர்வால் நெருக்கடி உணவுப் பொருட்களின் வரியை ரத்து செய்கிறார் அதிபர் டிரம்ப்: தன் வினை தன்னையே சுட்டது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் உலக நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரி விதித்ததால் அமெரிக்காவில் விலைவாசி உயரத் தொடங்கியது. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதையே பிரசாரமாக்கி சமீபத்தில் நடந்த ஆளுநர், மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.
இதையடுத்து புளோரிடாவுக்கு சென்ற அதிபர் டிரம்ப் விமானத்தில் அளித்த பேட்டியில், ‘‘மாட்டிறைச்சி, காபி, தக்காளி, வாழைப்பழம் உள்ளிட்ட வெப்ப மண்டலப் பழங்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இறக்குமதி வரி விதிப்பால் விலைவாசி உயர்வு என்பதால் சில பொருட்களுக்கு சரியாக இருக்கலாம்.
ஆனால் பெரும்பாலான சுமை பிற நாடுகள் மீது தான் சுமத்தப்படுகிறது’’ என்றார். ரூ.8,879 கோடி இழப்பீடு கேட்டு பிபிசி நிறுவனத்திற்கு மிரட்டல்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உரையை தவறாக திருத்தி வௌியிட்ட பிபிசி நிறுவனம் அதற்காக மன்னிப்பு கோரி உள்ளது. ஆனால், பிபிசி நிறுவனம், ரூ.8,879 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.


