Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026 முதல் அமலுக்கு வருகிறது புதிய வருமான வரி சட்டத்திற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல்

புதுடெல்லி: வருமான வரிச் சட்டம், 2025 என அழைக்கப்படும் இந்த சட்டம் சுமார் 64 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டம், 1961 க்கு பதிலாக 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இந்த புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், புதிய வரிகளை விதிக்காமல், பழைய சட்டத்தில் இருந்த 819 பிரிவுகளை 536 ஆகவும், 47 அத்தியாயங்களை 23 ஆகவும் குறைத்துள்ளது. வார்த்தைகளின் எண்ணிக்கையும் 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் முதன்முறையாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 புதிய சூத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. இது வரி விதிகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. இந்த மாற்றங்கள், வரி செலுத்துவோருக்கு வரி விதிகளைப் புரிந்துகொள்வதில் இருந்த சிரமங்களைக் குறைத்து, வரி நிர்வாகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்படும்.

* பணிந்தது ட்ரீம் 11

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ட்ரீம் 11 தனது இணையதளம் மற்றும் செயலியில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளை உடனடியாக நிறுத்தி உள்ளது.