Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அந்த வகையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் 25% வரி (ஆகஸ்ட் 27, 2025) அமலுக்கு வந்தது, இதன் மூலம் புது தில்லி மீது விதிக்கப்பட்ட மொத்த வரிகள் 50% ஆக உயர்த்தப்பட்டது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் 60க்கும் மேற்பட்ட நாடுகள் மீதும் அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து வருகிறார்.

இந்த நிலையில், உலக நாடுகளின் மீதான இந்த வரிகளை எதிர்த்த வழக்கு நேற்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சீனா, மெக்சிகோ, கனடா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி குறித்த வழக்கு ஆகும். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய அவசர நிலையின் போது அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது. தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரி விதித்துள்ளதாக வாஷிங்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அக்டோபர்.14 வரை புதிய வரிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு - டிரம்ப் பதிவு

வரி விதிப்பு குறித்த நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என்று அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அனைத்து வரிகளும் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இன்று பெரிதும் பாகுபாடு காட்டிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தவறாக, இந்த வரிகள் விலக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.ஆனால், அமெரிக்கா தான் கடைசியில் வெல்லும் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.இந்த வரிகள் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டிற்கு பேரழிவாக இருக்கும். இது நம்மை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும். நாம் வலுவாக இருக்க வேண்டும்." என்று பதிவிட்டார். அமெரிக்கா, இனியும் வர்த்தக பற்றாக்குறை, பிற Qநாடுகள் நம் மீது விதிக்கும் நியாயமற்ற வரிகள் ஆகியவற்றை பொறுக்காது.நமது தொழிலாளர்களுக்கும், அமெரிக்காவில் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் உதவ, வரி எப்போதும் சிறந்த ஆயுதம் ஆகும். பல ஆண்டுகளாக, பொறுப்பற்ற நமது அரசியல்வாதிகளால் நமக்கு எதிராக வரிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.