சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் அன்புச் சகோதரர் L.K. சுதீஷ் ஆகியோரின் தாயார் அம்சவேணி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
தாயை இழந்து வாடும் அன்புச் சகோதரி பிரேமலதா, சுதீஷ் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.