சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் காலமானார். தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பதவி ஏற்றார். தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அவர் கட்சிப் பணிகளை செய்து வருவதோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகிறார். இவர்களது தாய் அம்சவேணிக்கு அண்மைக்காலமாக வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஈரோடு பூத் முகவர்கள் கூட்டத்திற்கு சென்ற பிரேமலதாவும் சுதீஷும் சென்னைக்கு விரைகிறார்கள்.