ராமேஸ்வரம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தனது தாயாரின் அஸ்தியை கரைக்க நேற்று ராமேஸ்வரம் வந்தார். காலையில் பூஜை செய்து அக்னி தீர்த்தக்கடலில் அஸ்தியை கரைத்து விட்டு பின் கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார். தொடர்ந்து சாமி தரிசனம் முடித்துவிட்டு, சமீபத்தில் காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி ஷாலினியின் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘கொலை குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.’’ என்றார்.
+
Advertisement


