சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பூத் முகவர்கள் உடன் நேரடி சந்திப்பு- “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” என்ற பெயரிலும், தொகுதி மக்களுடன் சந்திப்பு- “கேப்டனின் ரத யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற பெயரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதன்படி வரும் 3ம் தேதி தனது மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி தொகுதி ஆரம்பாக்கம் பிள்ளையார் கோயில் அருகில் அவர் தொகுதி மக்களை சந்தித்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 4ம் தேதி காலை 10 மணியளவில் ஆவடியியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும், 4ம் தேதி மாலை 4 மணியளவில் திருத்தணியிலும் மக்கள் சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து 5ம் தேதி காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர் தொகுதியிலும், 6ம் தேதி வேலூர், குடியாத்தம், 7ம் தேதி திருப்பத்தூர், ஓசூரிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேி மாலை செங்கல்பட்டில் மக்கள் சந்திப்புடன் தனது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.