பாட்னா: பீகாரில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பீகார் கிராமப்புற பணிகள் துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொதுசெயலாளருமான அசோக் சவுத்ரி, ரூ.200 கோடி மதிப்பிலான நில ஒப்பந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொன்னதாக பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அமைச்சர் அசோக் சவுத்ரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.100 கோடி நஷ்ட ஈடு கோரி பிரசாந்த் கிஷோர மீது வழக்கு தொடரப்படும்” என தெரிவித்துள்ளார்.
+
Advertisement