Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவர்கிரிட்டில் 1543 பொறியாளர், சூபர்வைசர்கள்

பணியிடங்கள் விவரம்:

1. கள பொறியாளர்: (Field Engineer):

i) எலக்ட்ரிக்கல்: 532 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) சிவில்: 198 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 55% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.30,000. வயது: 17.09.2025 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.

2. கள சூபர்வைசர்: ( Field Supervisor):

i) எலக்ட்ரிக்கல்: 535 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) சிவில்: 193 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்: 85 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.23,000. வயது: 17.09.2025 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, ேநர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பணி எண்: 1க்கு ரூ.400/-, பணி எண்: 2க்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு recruitment@powergrid.in என்ற இ.மெயில் முகவரியை பார்க்கவும்.

https://www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.09.2025.