Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு

கராகஸ்: வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. வெனிசுலாவில் அதிகாலை 3.51 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் தலைநகர் காரகாஸ் உள்பட வெனிசுலா முழுவதும் உணரப்பட்டது. வெனிசுலாவின் கிழக்கு கடலோரம் அமைந்துள்ள மீனி கிராண்ட் நகரத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

வெனிசுலாவின் அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.