Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வறுமை துரத்துவதால் மருத்துவம் படிக்க போராடும் மாணவி: மாணவி பூமாரியின் மருத்துவப் படிப்புக்கு அரசு உதவ கோரிக்கை

விருதுநகர்: விறகு வெட்டி குடும்பத்தை காப்பாற்றும் பெண் தொழிலாளியின் மகள் MBBS படிக்க தேர்வாகி உள்ளார். அவரது மருத்துவ கனவை நினைவாக்க அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாணவி பூமாரி. தந்தையை இழந்ததால் அவரது தாய் பொன்னழகு, விறகு வெட்டி வருமானம் பார்த்து தமது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார். வறுமை துரத்திய போதும் மாணவி பூமாரி +12 ல் 573 மதிப்பெண் பெற்று தான் படித்த அரசு பள்ளியில் முதலீடம் பிடித்து அசத்தினார். மருத்துவராக வேண்டும் என்று தமது கனவை சுமர்ந்து நீட் தேர்வை எழுதிய மாணவி பூமாரி அதிலும் தேர்ச்சி பெற்றார். 7.5% இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் கல்வி கட்டணத்தை செலுத்த அவரது குடும்பம் சிரமம்பட்டு வருகிறது. MBBS படிக்க இடம் கிடைத்தாலும் வறுமையால் மருத்துவ கனவை நனவாக்க மாணவி பூமாரி குடும்பம் போராடி வருகிறது. ஏற்கனவே கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்ததாக கூறும் மாணவி பூமாரியின் தயார் தமது பிள்ளையின் மருத்துவ படிப்புக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவி பூமாரி புலிக்குறிச்சி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவராக உள்ளார். எனவே மாணவிக்கு மாவட்டம் நிர்வாகம் உதவ வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.