மகாராஷ்டிரா:வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மகாராஷ்டிரா அரசு. மின்கட்டணம் என்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கைகள் அரசின் மானியங்கள், உற்பத்தி செலவுகள் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களும் வேறுபடுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. 200 யூனிட்டுக்கு ரூ.255, 300 யூனிட்டுக்கு ரூ.675 என யூனிட்டை பொறுத்து கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. 400 யூனிட்டுக்கு ரூ.1125, 500 யூனிட்டுக்கு ரூ.1725, 600 யூனிட்டுக்கு ரூ.2250, 600 யூனிட்டுக்கு ரூ.3650 என கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். சில மாநிலங்கள் மானிய அடிப்படையில் அதிகபட்ச சலுகைகள் மின்கட்டணத்திற்கு கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் இணைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மின் விநியோக நிறுவனம் சுயம்பூர்ண மகாராஷ்டிரா குடியிருப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் தகுதி உடைய குடும்பங்கள் பெயரளவிலான ஆரம்ப கட்டணத்தை செலுத்தினால் அவர்களுக்கு 25 ஆண்டுகால இலவச மின்சாரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடைய நுகர்வோரின் வீடுகளின் கூரைகளில் 1கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்பத்தி சாதனம் நிறுவப்படும். மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யோ கர் மின்சார திட்ட மூலம் 1 கிலோ வாட் கூரை சூரிய சக்தி திட்டத்தை நிறுவ ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக மாநில அரசு பொது பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம், SC, ST பிரிவினருக்கு ரூ.15 ஆயிரமும் மானியம் வழங்குகிறது.
ஒரு யூனிட் நிறுவுவதற்கான மொத்த செலவு ரூ.60 ஆயிரம் ஆகும். பயனாளிகள் ரூ.15 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் செலுத்தினால் இந்த சாதனங்கள் மின் கட்டணத்துடன் இணைக்கப்படுவதால் பயனாளிகள் தாங்கள் பயன்படுத்திய மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை நெட் மிட்ரி சிஸ்டம் மூலம் நிறுவனத்திற்கே விற்க முடியும். மாதாந்திர மின் நுகர்வு 100 யூனிட்டுக்கு குறைவாக இருக்கும் தகுதி உள்ள நுகர்வோரின் குடியிருப்புகளில் இந்த சாதனம் நிறுவப்படும். இதற்கு மாநில அரசு ரூ.655 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக பிபிஎல் மற்றும் EWF பிரிவுகளில் உள்ள சுமார் 5 லட்சம் குடும்பங்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
