உடுமலை: உடுமலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுகுணா புட்ஸ் நிறுவனம் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கோழி பண்ணைகள் மற்றும் தாய் கோழி, கறிக்கோழி உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. உடுமலை நேரு வீதியில் சுகுணா புட்ஸ் தாய் கோழி பண்ணை மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 23ம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. சோதனையின்போது ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதா? என்ற விவரத்தை வருமான வரித்துறையினர் தெரிவிக்கவில்லை. இதேபோல நாமக்கல்லில் கோழிப்பண்ணை அதிபரும், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியின் தலைவருமான வாங்கிலி சுப்பிரமணியம் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனை 25ம் தேதி இரவுடன் முடிந்தது.
+
Advertisement