Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி செங்கல்பட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் ரொசாரியோ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரவிசந்திரன் கலந்துக்கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், இஎம்ஐஎஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து கற்பித்தல் பணியினை முழுமையாக செய்திட வாய்ப்பளிக்க வேண்டும், காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறுவதற்க்கு தடையாக உள்ள ஆணைகளை ரத்து செய்து உடனடியாக வழங்க வேண்டும், 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக நடைமுறைபடுத்த வேண்டும். கோடை விடுமுறையை ஆசிரியர்களுக்கு முழுமையாக வழங்கிட வேண்டும். 2009க்கு பிறகு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். ஆசிரியர்ளுக்கு தனியாக பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.