வயது வரம்பு: 01.08.2025 தேதியின்படி 20 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.30 ஆயிரம்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், ஜிடிஎஸ் (GDS), ஐபிபிஎஸ் (IPPS) ஆகிய பணிகளில் பெற்றுள்ள அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
https://www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (29.10.2025).
 
  
  
  
   
