Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிக பயன்பாட்டால் வேகமாக குறையும் ஆற்றல் சக்தி 65 ஆண்டுகளுக்கு மட்டுமே எரிவாயு கிடைக்க வாய்ப்பு: விழிப்புணர்வு நாளில் அறிவியல் ஆய்வாளர்கள் கணிப்பு

ஆற்றல் வளங்கள் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது. உணவு, போக்குவரத்து, வெப்பம், ஔி என்று ஒவ்வொன்றுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த வகையில் எனர்ஜி என்னும் ஆற்றல், மனிதவாழ்வில் உணவுக்கு சமமான ஒன்றாகி விட்டது. சமையலுக்கான காஸ்சிலிண்டர், வெப்பத்தை தணிக்கும் மின்விசிறி, வெளிச்சம் தரும் விளக்குகள் என்று அனைத்தும் ஆற்றல் மிக்க எரிபொருட்களால் உருவாக்கப்பட்டு, நமது பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் போன்றவை தற்போது முக்கிய எரிபொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கும் மட்டுமே கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. எனவே நமது வருங்கால சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை சேமித்து வைக்க வேண்டியது அத்தியாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமானது என்று சர்வதேச ஆய்வுகள் தகவல் தெரிவித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு மாற்று எரிசக்திகளை பயன்படுத்த வேண்டியதும், கண்டுபிடிப்பதும் மிகவும் அவசியமாகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 10ம்ேததி (இன்று) ‘உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. நாம் எரிசக்தியை உற்பத்தி செய்யும் வேகத்தை காட்டிலும், அதிகமான வேகத்தில் செலவளிக்கிறோம். உலகளவில் இந்தியாவின் எரிசக்தி ஆதாரம் 1 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர், இந்தியாவில் உள்ளனர். எனவே நம்மால் இயன்றவரை எரிசக்தியை சேமிப்பது, நாட்டிற்கு பெரும் பணத்தை சேமிப்பதற்கு இணையானது,’’ என்கின்றனர் அறிவியல் ஆர்வலர்கள்.

இது குறித்து சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள அறிவியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகளவில் எரிசக்தி வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்தவகையில் இந்தியாவிலும் அந்தநிலை தொடர்கிறது. இந்தியாவில் நிலக்கரி, பெட்ரோலிய கச்சா எண்ணெய் மூலம் 60 சதவீத நிலக்கரி தயாரிக்கப்படுகிறது. மின்உற்பத்தியின்போது கரிஅமிலவாயு, நைட்ரஜன், சல்பர்டை ஆக்சைடு போன்றவை அளவுக்கதிகமாக வெளியேறுகிறது. இது சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. இதனால் புவி வெப்பமயமாதல், வானிலை மாற்றங்கள் போன்ற இயற்கை பாதிப்புகள் உருவாகின்றன. ஆனால் நாம் சுற்றுச்சூழல் பற்றி கவலையில்லாமல் தொடர்ந்து மின்சாரம் தயாரித்து வருகிறோம். அதோடு அதை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தியும் வீணாக்குகிறோம். குறிப்பாக மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ெகாண்டு செல்லும் போது பெரும் விரயம் ஏற்படுகிறது. இதனால் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு பதில் 3 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இன்றைய நிலையில் 90 சதவீத வீடுகளில் பல்வேறு வகையான மின்சாதனப் பொருட்கள் உள்ளன. இவற்றின் இயக்கத்திற்காகவும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துகிறோம்.

அதே ேநரத்தில் மின்உற்பத்தியை அதிகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மின்தட்டுப்பாடு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் மாறி விடும். எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, எரிபொருள் ேசமிப்பு போன்றவற்றால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். தற்ேபாது புதிய 5ஆண்டு திட்டத்தில் மாற்று எரிசக்தியாக சூரியஒளியில் இருந்து மின்சாரம் (சோலார்) என்பது பிரதானமாக மாறி வருகிறது. எனவே பொதுமக்களும் இது ேபான்ற முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு எரிசக்தியை ேசமிப்பதற்கு முன்வர வேண்டும். ஆற்றல் சக்தி என்பது நமது முன்னோர்கள், நமக்கு விட்டுச்சென்ற கொடை. அதை வீணாக்காமல் சேகரித்து நாளைய தலைமுறைக்கு சேர்க்க வேண்டியது நமக்கான முக்கிய கடன். எனவே இந்தநாளில் நாம் அனைவரும் ஆற்றல் சக்தியை சேமிப்பதற்கான உறுதி மொழியை ஏற்பதும், எரிசக்தியை வீணாக்காமல் இருப்பதும் காலத்தின் அவசியம். இவ்வாறு அறிவியல் ஆய்வாளர்கள் கூறினர்.

பெரும் சவால் நகரமயமாக்கல்

‘‘வேகமாக வளர்ந்து வரும் உலக மக்கள் தொகை, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்றவை வளரும் நாடுகளில் எரிசக்தி ஆற்றலுக்கு பெரும் சவாலாக உள்ளது. தற்போது உலக மக்கள் தொகையில் 80சதவீதம் பேர், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளில் வசிக்கின்றனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த சவாலானது வளங்கள், புதைபடிவ எரிபொருட்கள், நீர் மற்றும் இயற்கை வளங்களின் நுகர்வு விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. இப்படி தொடரும் அளவுக்கதிகமான நுகர்வானது இயற்கை வளங்கள் மற்றும் எரிபொருட்களுக்கு ஒரு விரிவான அழிவை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க நிலையான எரிசக்தி ஆதாரங்களை கண்டறிவது மிகவும் அவசியம். அதேபோல் பெரிய அளவிலான ஆற்றல் உற்பத்திக்கு இந்த நிலையான எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த வேண்டியதும் முக்கியம்,’’ என்கின்றனர் எரிசக்திதுறை மேம்பாட்டு நிபுணர்கள்.

கணக்கிட்டால் அருமை புரியும்

உதாரணமாக ஒருவரது காஸ் சிலிண்டர், வழக்கத்தை விட ஒருவாரம் அதிகமாக பயன்பட்டாலோ, மின்சாரக் கட்டணம் வழக்கத்தை விட குறைந்தாலோ, எவ்வளவு மிச்சம் என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும். அப்போது எரிபொருள் ேசமிப்பின் அருமை புரியும். காஸ் சிலிண்டர் பயன்பாட்டில் அவ்வப்போது விறகு அடுப்பு, மின்விளக்கு உபயோகத்திற்கு சூரியஒளி மின்சாரம் என்று, அவ்வப்போது மாற்று முறையை பயன்படுத்த அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். இதேபோல் ஒவ்வொரு ஆற்றல் சக்திக்கும் ஒரு மாற்று உள்ளது. இது நமது செலவினங்களை குறைப்பதோடு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் தீர்வை தரும் என்பது அறிவியல்

ஆய்வாளர்களின் கூற்று.