சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், ‘மீண்டும் கிராமங்களை நோக்கி’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மதுராந்தகம் அருகே சூனாம்பேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மத்தியில் ராமதாஸ் பேசியதாவது: எனது வாழ்க்கை ஒரு போராட்டம் தான். எனது அரசியல் வாழ்வு முழுக்க போராட்டங்களாலேயே ஆனது. நான் நாளும் உழைக்கிறேன்.
நான் எந்த பதவிக்கும் போக விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து இவர்களை எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன். நீங்கள் (பெண்கள்) நினைத்தால் இந்த ஆட்சியை எங்களிடம் கொடுத்துவிட்டால், உங்களுக்கு எல்லா வரமும் சட்டம் மூலமாக செய்து தருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா. அருள்மொழி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் முரளி சங்கர், மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.