போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இத்தகைய விபத்து நடந்துள்ளது. இதில் 23 பேர் காயமும் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் போர்ச்சுகல், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி மற்றும் உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அனைத்து ஃபுனிகுலர் கேபிள் கார்களும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போர்ச்சுகலின் செயிண்ட் டொமினிக் தேவாலயத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போர்ச்சுகலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் திரண்டனர். பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர், தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரை நகரத்தில் உள்ள அனைத்து ஃபுனிகுலர் சேவைகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.