சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் பாஜ ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளிவந்திருக்கும். 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறும் புள்ளி விவரம் உண்மையானதல்ல, ஜோடிக்கப்பட்ட ஒன்று.
ராகுல்காந்தி கோரிக்கையின்படி மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்பதற்கு நாட்டில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவதால் அதை தவிர்ப்பதற்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மோடி அரசு தடுத்து வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.