சென்னை: மெட்ரோபாலிடன் சிவில் இன்ஜினியரிங் அசோசியேஷன்-சென்னை புறநகர் சங்கத்தின் பொறியாளர் தின விழா சென்னையில் நடந்தது. சங்க தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் பி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பேசியாட் மாநில முன்னாள் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், ‘‘பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைத்திட விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து கவுன்சில் பெற்று தந்திட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.