புதுச்சேரி : புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார்.புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் ஊழல் நடப்பதாக சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், "புதுச்சேரியில் நேர்மையான ஆட்சி நடக்கவில்லை. தொண்டர்கள் மனதை பாஜக பிரதிபலிக்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.
+
Advertisement