பாலித்தீன் கவர் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகின. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலை என்பது இயங்கி வருகிறது. இந்த தனியார் தொழிற்சாலையில் பாலித்தீன் கவர் தயாரித்து வருகின்றனர். இந்த கம்பெனி பொறுத்தவரை சுமார் 40க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் எதிர்பாராத மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ ஏற்பட்ட தொடர்ச்சியாக மறைமலைநகர் பகுதியில் இருந்தும் அதேபோல் மஹேந்திரசிட்டி பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு இடங்களில் இருந்து 30க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இருந்தாலும் கூட யாரும் அதிகளவில் நடந்த தீ விபத்து காரணமாக ஊழியர்கள் யாரும் இல்லாத ஒரு காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட தீ விபத்து காரணமாக ரூ.70 லட்சம் மதிப்பிலான பாலத்தின் கவர்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்ததாக தகவல் தெரிவித்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்துக்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.