வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்
சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்களை நியமிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தி உள்ளார். நகர்ப்புற வாழ்வாதார திட்டப் பணியாளர்களையும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கலாம். ஒன்றிய, மாநில அரசுகளின் நிரந்தர பணியாளர்கள் நிலை அலுவலர் பணிக்கு வர முடியாத நிலையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.