Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது சிபிஐ

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்பதற்காக, சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகியோரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.