பொள்ளாச்சி : பொள்ளாச்சி கோவைரோடு சிடிசி மேட்டிலிருந்து வடுகபாளையம் ரயில்வே கேட் வழிதடத்தில் உள்ள மின் கம்பம் அண்மையில் வாகனம் மோதி சேதமானது. கம்பத்தில் கீழ் பகுதி சுமார் 2 அடிக்கு கான்கிரீட் பெயர்ந்து, இரண்டு துண்டாக தொங்கியது.
ஆனால் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை அப்படியே விடப்பட்டது. பலத்த காற்று அடிக்கும்போது எந்நேரத்திலும் கம்பம் சரிந்து விழும் நிலை உள்ளது. எனவே சேதமான மின்கம்பம் கீழே விழுந்து விபரீத சம்பவம் ஏற்படுவதற்குள், விரைந்து மாற்றியமைத்து புதிய கம்பம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.