பொள்ளாச்சி : பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 1451 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மதுபாட்டில்களை அழிக்கும் பணி, நேற்று மேற்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது. இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு பெரிய அளவில் குழி தோண்டப்பட்டது.
அதன்பின், பல்வேறு இடங்களில் போலீசார் பறிமுதல் செய்த 1451 மதுபாட்டில்களையும், கோட்ட கலால் அலுவலர் சிவக்குமார், டாஸ்மாக் குடோன் மேலாளர் அரசகுமார், இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, எஸ்ஐ பழனி ஆகியோர் முன்னிலையில் ஒரே இடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.