காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நடந்த மாவீரர் தின மாநாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பக்கத்தில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு கொடுத்து கூட்ட நெரிசலில் இறந்தால் பரவாயில்லை என்கின்றனர். மரங்கள், மாடுகள் மாநாடு என்றால் சிரிக்கின்றனர். நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி. 2026 தேர்தலில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. அரசியலில் என்னை துணை நடிகராக தான் வைத்துள்ளனர். வரும் தேர்தல் நமக்கு போர்க்களம். மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். பிப். 7ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும். இதில் 117 பேர் பெண் வேட்பாளர்கள், 117 பேர் இளைஞர்கள். இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement

