Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்: ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடந்தது

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் கூடப்பாக்கம் இ.குட்டி, பிரீஸ் ஜி.பன்னீர், குமார், முகப்பேர் கண்ணதாசன், வலசை தருமன், ராஜா, கராத்தே வில்சன், ரமேஷ், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் பழஞ்சூர் பா.வின்சென்ட், பூவை ஆர்.சரவணன், தொழுவூர் டி.கே.சீனிவாசன், மணவூர் ஜி.மகா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.எம்.ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் தொழுவூர் டி.கே.சோனு என்கிற பரந்தாமன்ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்திற்கு கட்சி தலைவர், கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை எம்.ஜெகன் மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் டி.ருசேந்திரகுமார், மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், தொழுவூர் மாறன், பா.காமராஜ் முல்லை பலராமன், பி.பரணிமாரி, வியாசை பா.சிகா, பி.சைமன்பாபு, தாமஸ் பரணபாஸ், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், டி.கே.சி.வேணுகோபால், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், நாயப்பாக்கம் டி.மோகன், என்.பி.முத்துராமன், ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் சுருளி வீரமணி, த.இளவரசன், ஜி.லோகு, செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் ஜி.டேவிட், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏ.கே.ஆர்.ராஜசேகர், ஜி.நிஜாமுதீன், விடையூர் எஸ்.குமரேசன், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் வேப்பம்பட்டு சி.டி.தியாகு, ஒன்றிய பொருளாளர் புட்லூர் எம்.டேனியல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புரட்சி பாரதம் நிறுவனத் தலைவர் பூவை எம்.மூர்த்தி, பிஎஸ்பி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் உருவ படங்களுக்கு பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூட்டத்தில் நிறேவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் மண் சரிவு ஏற்பட்டதில் முண்டக்கை, சூரல்மலை, புஞ்சரி மட்டம் ஆகிய கிராமங்கள் அடியோடு அழிந்து இருக்கிறது. இப்பேரழிவில் வீடுகள் மண்ணில் புதைந்தும், பல வீடுகள் ஆற்றில் அடித்து சென்றும் மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்துள்ளனர். எனவே இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்குமாறும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பட்டியல் சாதியில் மிகவும் பின் தங்கிய பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை வரவேற்று, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு (ம) உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புத்தகப் பையை தூக்கும் வயதில் அரிவாள் தூக்குகிற கலாச்சாரம் பரவாமல் அரசு கட்டுப்படுத்தி மாணவர்கள் எதிர்காலம் வீணாகாமல் முளையிலேயே சாதி வன்மத்தை கிள்ளி எரிந்து நல்வழி படுத்த வேண்டும் என உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.