சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தமிழக முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப, மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


