சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. நேற்று அளித்த பேட்டி: விஜய் உச்சபட்ச நட்சத்திரம். அவர் களத்திற்கு வரவேண்டும். மக்களின் பிரச்னைக்காக போராட வேண்டும். பலமுறை களத்தை சந்தித்து அனுபவம் பெற வேண்டும். சினிமா கவர்ச்சி மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியுமா என்றால் அது முடியாது. தனது எதிரி மதவாத கட்சிகள் தான் என்கின்றார். மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். இப்போது வரை அவர் தனித்து தான் இருக்கின்றார். பாமக உள்கட்சி விவகாரம் குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அந்த கட்சிக்குள் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை மூத்தவர்கள், நிர்வாகிகள் பேசி தீர்ப்பார்கள். மாற்றுக்கட்சியினர் கருத்து சொல்வது முறையல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement