சென்னை: சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜ மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அண்ணாமலை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக பாஜ பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் பொன்ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி மறு வரையறை தொடர்பாக இன்று நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மும்மொழி கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி மார்ச் 5ம் (இன்று) முதல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும். 1 கோடி கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்த கையெழுத்து இயக்கம் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Advertisement