விழுப்புரம்: விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய், கொள்கை எதிரி பாஜக என கூறிவிட்டு இப்ேபாது திமுக தான் தனக்கு எதிரி என பேச ஆரம்பித்துள்ளார். தற்போது பாஜக குறித்து பேசுவதில்லை. விஜய்யுடன் பல நடிகர்கள் சேர்ந்து கொண்டு புதியதாக கட்சி ஆரம்பித்து கூட்டணி வைத்தால் கூட 2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தான் மகத்தான வெற்றி பெற்று ஸ்டாலின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். ராகுல் காந்தி அரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்று உள்ளதை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார்.
பீகாரில் 81 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்கள். அதே போன்று தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் வாக்கு பறிபோக உள்ளது. அரசியல் என்றால் என்னவென்று விஜய் தெரிந்து கொள்ளவேண்டும் எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்காமல் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்தார். முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லி விமர்சித்து பேசுவதற்கு எந்த தகுதியும் விஜய்க்கு கிடையாது. அரசியல் என்ன என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டால் தான் யதார்த்தமான கள நிலவரம் அவருக்கு புரியும்.
