டெல்லி: அரசியல் சண்டைக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவதூறு வழக்கில் தெலங்கானா முதல்வரை விடுவித்ததற்கு எதிராக அம்மாநில பாஜக நிர்வாகி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரலுக்கு உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. அரசியல் சண்டைக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+
Advertisement