திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தை திமுகவினர் முன்வைக்கின்றனர். தமிழ்நாடு ஆளுநர் திமுகவினர் முழக்கத்தை கேலி செய்யும் வகையில் கருத்து கூறுகிறார். ஆளுநர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் போன்று அவ்வப்போது கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கான பொறுப்பு, கடமையை மறந்து அரசியல் பேசுவது வழக்கமான ஒன்று தான். இதில் கருத்தியல் ரீதியான போராட்டம் எது, மோதல் எது என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது அவருடன் இருப்பவர்கள் அவருக்கு எடுத்துக்கூற வேண்டும்.
அதிமுக-பாஜ ஏற்கனவே கூட்டணி வைத்துள்ளதாக கூறும் நிலையில், அந்த கூட்டணியில் விஜய் சேருவாரா என்பது கேள்விக்குறி. திமுகவை வீழ்த்த விஜய் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்துவோம் என ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது, அவருடைய ஆசை, வேட்கை. அதற்கு விஜய் உடன்படுவாரா என்பது தெரியவில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக பாஜ உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்த சூழலில் தான் பாஜகவின் அணுகுமுறையை விமர்சிக்க வேண்டி வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.