Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொள்கை கூமுட்டை என கடுமையாக பேசிய சீமானை எல்லாம் கண்டுக்காதீங்க... தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல், செயற்குழுவில் 26 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழக வெற்றி கழகம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என தொண்டர்களுக்கு அதன் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்றார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக் கையில் ‘‘திராவிடம் என்பது வேறு. தமிழ்த் தேசியம் என்பது வேறு. விஜய் கொள்கை எல்லாம் கூமுட்டைத்தனமானது’’ என கடுமையாக சாடி னார்.

இதனையடுத்து சீமானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக நிர்வாகி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக கருதி விலகி செல்வார்கள். இதுமட்டுமல்லாது, தமிழக வெற்றி கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

நமக்கு பல வேலைகள் உள்ள நிலையில், சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். எனவே, எங்கள் அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு களமாடிக் கொண்டு இருக்கிறோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை தலைவர் விஜய் தங்களுக்கு உணர்த்தியுள்ளார். சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை.

மேலும், அவரவர் கருத்து அவரவர் உரிமை; முடிவை தமிழ்நாட்டின் மக்களின் கரங்களில் கொடுத்துவிட்டு தங்கள் பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநாடு குறித்து நேர்மறை, எதிர்மறை கருத்துகளை உயர்மட்ட தலைவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.

அதேபோல், தவெக மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு கண்ணியத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும், தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டும், பூத் கமிட்டியில் அதிக பெண்களை இடம்பெற செய்யவேண்டும் என கூட்டத்தின் வாயிலாக விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:

* சமூக நீதி, மதச்சார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவக் கோட்பாட்டிற்கு சமூக நீதிக்கு எதிரான வர்ணாஸ்ரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்படும்.

* மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

* ஒரேநாடு, ஒரே தேர்தல் மூலம் ஜனநாயகத்தை அச்சுறுத்த நினைக்கும் பாஜ அரசுக்கு கண்டனம்.

* மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.