நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருசமூகங்களுக்கு இடையேயான மோதல் அல்ல: காவல்துறை விளக்கம்
நெல்லை: நெல்லையில் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருசமூகங்களுக்கு இடையேயான மோதல் அல்ல என்றும் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வகுப்பறையிலேயே ஒரு மாணவன் சக மாணவனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்னை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னை சம்பவத்துக்கு முந்தைய நாளும் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இன்று காலை, பள்ளிக்கு வந்த மாணவன், தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து, சக மாணவனின் முதுகுப் பகுதியில் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரிவாளைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவனின் கையிலும் லேசான காயம் ஏற்பட்டது.
வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தாக்கிய மாணவனைப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்வாடி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அரிவாளால் தாக்கிய மாணவனை வகுப்பறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வருகின்றனர். விசாரணைக்கு பிறகு காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
நெல்லையில் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருசமூகங்களுக்கு இடையேயான மோதல் அல்ல என்றும் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.