Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை: 45 நாட்களுக்குப் பிறகு சீர்காழியில் மீட்ட போலீஸ்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சூர்யா சோனு தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி துர்க் ரயில்நிலையத்தில் குழந்தையையோடு இருவரும் ரயில் எற காத்திருந்தனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீர் என காணாமல் போயிருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் தேடி பார்த்த அந்த தம்பதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார் அங்கு இருந்த cctv காட்சிகளை ஆய்வுசெய்த போது 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் குழந்தையோடு கவுண்டரில் டிக்கெட் வாங்கியிருப்பது தெரியவந்து. இருக்கிறது உடனே சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் டிக்கெட் முன்பதிவுசெய்யபோது செல்போன் நம்பரை கொடுத்திருப்பது தெரிய வந்துருகிறது. அந்த நம்பர் மூலம் விசாரணை நடத்தியதில் குழந்தையை கடத்தி சென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். கும்பகோணம் அருகே உள்ள சாத்தனுர் தான் ஆறுமுகத்தின் சொந்த ஊர் இவருக்கு பெற்றோர் இல்லை 45 வயது ஆகுகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை 10 ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் பிளம்பர் வேலை பார்த்துவந்தியிருக்கிறார்.

இவர் மீது எந்த ஒரு கூற்ற வழக்கும் பதிவாகவில்லை அமைதியாக வாழ்ந்து வந்த ஆறுமுகம் திடிர் என குழந்தையை கடத்தியது என் அந்த குழந்தையை அவர் என்ன செய்தார் விற்பதற்காக கடத்தினரா குழந்தை உயிரோடு தான் இருக்கிறதா போன்ற கேள்விக்கு விடைதேடி போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கின. துர்க் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பிய ஆறுமுகம் நேராக கும்பகோணத்திற்கு வந்துருகிறார்.

இதை தெரிந்து கொண்ட சத்தீஸ்கர் போலீசார் குழந்தையின் பெற்றோரோடு தமிழ்நாட்டிற்கு ரயில் ஏறினார் ஆறுமுகத்தின் சொந்த ஊர் ஆன சாத்தனூருக்கு சென்று விசாரித்த போது அவர் அங்கு வந்து பலநாள் அவதாகவும் ஒரு ஆண் குழந்தையை கையில்வைத்திறதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறினார். சத்தீஸ்கர் போலீசார் திருநிலக்கடி போலீசாரின் உதவியை நாடி தொடர்ந்து விசாரித்ததில் அறுமுகத்திற்கு சீர்காழியில் உறவினர்கள் இருப்பது தெரியவந்திறக்கிறது.

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சீர்காழிக்கு சென்று பார்த்த போது ஆறுமுகம் குழந்தையோடு சிக்கினார் குழந்தையை மீட்ட போலீசார் ஆறுமுகத்தை கைதுசெய்து விசாரித்திருக்கிறார்கள். அறுமுகத்திற்கு குடும்பம் என்று யாரும் இல்லை 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளாததால் சமீபத்தில் தான் அவருக்கு குடும்பத்தின் அருமை தெரிந்திருகிறது. சம்பத்தன்று ரயில்நிலையத்தில் குழந்தை தனியாகவிளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த ஆறுமுகம் அதை கடத்தி சென்று தன்னுடைய குடும்பமாக அகி வாழலாம் என முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக தான் குழந்தையை கடத்தியதாக ஆறுமுகம் வாக்குமூலம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆறுமுகத்தை கைது செய்த சத்தீஸ்கர் போலீசார் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுருக்கிறார்கள். கிட்டதட்ட 45 நாட்களாக 2000 கிலோமீட்டருக்கு மேல் பயணம்செய்து இறுதியில் அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.