காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் அறிவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரின் அண்ணாபதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 150 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் அண்ணாபதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தெற்கு மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி தாமஸ் ஜேசுதாசன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி யுவராஜ், ஆவடி காவல் ஆணையரகத்தில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பிரபு, தாம்பரம் ஆணையரகம் சேலையூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சந்துரு,
எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ரமேஷ்குமார், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் அமுதா, சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு தலைமை காவலர் சுரேஷ் உட்பட மொத்தம் 150 அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிவித்துள்ளார்.