காவல் நிலைய விசாரணைக்குச் சென்றவர் வீடு திரும்பியதும் மரணமடைந்த வழக்கில் 3 காவலர்களுக்கு அயுள் தண்டனை
சென்னை: 2009ல் சென்னை கோட்டூர்புரத்தில் குடிபோதையில் தகராறு செய்த பழனி என்பவர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ, 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. போலீசார் தாக்கியதே மரணத்திற்கு காரணம் என ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவர கொலை வழக்காக மாற்றப்பட்டது. அப்போது எஸ்.ஐ. ஆக இருந்த ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் மனோகரன், ஹரிஹர சுப்பிரமணியன் மூவருக்கும் தண்டனை. இரு காவலர்கள் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.