கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டியில் கூறியதாவது; துடியலூர் அருகே தனிப்படைபோலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது 3 பேரையும் சுட்டுப்பிடித்தனர். போலீசார் காலில் சுட்டதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துடியலூர் அருகே பதுங்கியிருந்த 3 பேரையும் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளால் தாக்கி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் ஆகியோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது 4, 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
+
Advertisement 
 
 
 
   