கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 161 பேரிடம் ஒருநபர் ஆணைய குழு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 86 பேர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று 8 பேர் ஒருநபர் ஆணைய குழுவில் ஆஜராகினர்.
அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களின் விவரம், தொழில், சாராயம் குடிக்கும் பழக்கம் எத்தனை ஆண்டுகளாக உள்ளது, விஷ சாராயம் யாரிடம், எங்கு வாங்கி குடித்தீர்கள் என்ற என நீதிபதி விசாரித்தார். இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை தினமும் தலா 10 நபர்கள் வீதம் 30 பேர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.