Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூரியனை பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது எனக்கு சிறை வாழ்க்கை வேண்டாம் விஷம் கொடுத்து விடுங்கள்: நீதிபதியிடம் கதறிய நடிகர் தர்ஷன்

பெங்களூரு: சூரியனை கூட பார்க்க முடியாத சிறை வாழ்க்கையை தன்னால் சமாளிக்க முடியாததால் விஷம் கொடுக்குமாறு நீதிபதியிடம் தர்ஷன் கேட்க, கூடுதல் தலையணை, போர்வை மற்றும் சிறை வளாகத்தில் நடப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், சிறையில் தான் இருக்கும் அறையில் கூடுதலாக தலையணை மற்றும் போர்வை வழங்க அனுமதிக்க வேண்டும். மேலும் வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவு சாப்பிட அனுமதி வழங்ககோரி நடிகர் தர்ஷன் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி விசாரணை நடத்தினார்.

அப்போது, காணொலி காட்சி மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், தர்ஷன் கூறியதாவது: சூரியனைப் பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது. சிறை அறையிலிருந்து வெளியே வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அறையை விட்டு வெளியே செல்லாததால் கைகள் எல்லாம் பூஞ்சைகள் நிறைந்திருக்கின்றன. ஆடைகளில் துர்நாற்றம் வீசுகிறது. என்னால் இதற்கு மேலும் இப்படியே இருக்க முடியாது. இந்த வாழ்க்கையை என்னால் இனிமேலும் அனுபவிக்க முடியாது. எனக்கு விஷம் கொடுத்துவிடுங்கள் என்று நீதிபதியிடம் கதறினார். அதற்கு, அப்படியெல்லாம் செய்யமுடியாது என்று கூறிய நீதிபதி, மனிதநேய அடிப்படையில் மனுதாரரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் கூடுதலாக தலையணை, போர்வை பயன்படுத்த அனுமதி வழங்குமாறும், சிறை விதிமுறைகள் அடிப்படையில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறை வளாகத்தில் நடப்பதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.