சென்னை: புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. வணக்கம் வள்ளுவ' நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். ஈரோடு தமிழன்பன் ஹைக்கூ வகை கவிதையை தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் ஆவார். சென்னை தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.
+
Advertisement


